இந்திய பி.பி.ஓ. மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
இந்திய பி.பி.ஓ. மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்திற்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்திற்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய பி.பி.ஓ. (பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங்) மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்திருக்கும் உங்களை பாராட்டுகிறேன். இதன் மூலம் பி.பி.ஓ. மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை தொழில்களை நாடு முழுவதும் 2-ம் மற்றும் 3-ம் அடுக்கு நகரங்களில் தொடங்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகள் உயரவும் இந்த திட்டம் ஊக்கமளிக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ரூ.493 கோடி மொத்த செலவில் 48 ஆயிரத்து 300 இடங்களை அமைத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தமிழகத்தில் சென்னை பகுதியில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சென்னை பகுதியில் பி.பி.ஓ. தொழிலுக்கு இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் (எஸ்.டி.பி.ஐ.) 7,705 இடங்களும் (100 இடங்கள் புதுச்சேரிக்கு) கிடைத்துள்ளது.
இதன் மூலம் 8,387 பேருக்கு நேரடியாகவும், 16 ஆயிரத்து 774 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் செயல்பாட்டுத் தொடக்க அளவிலேயே 93 சதவீத வெற்றி விகிதம் அமைந்துள்ளது.
தற்போது 2 மற்றும் 3-ம் அடுக்கு நகரங்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பதிமூன்று 2-ம் நிலை மற்றும் 3-ம் அடுக்கு நகரங்களில் 51 ஐ.பி.பி.எஸ். என்ற இந்திய பி.பி.ஓ. மேம்பாட்டு திட்ட யுனிட்டுகளை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஊரகப்பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்துக்கு ஒத்திசைவாக உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருப்பதால், இந்திய பி.பி.ஓ. மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எங்கள் மாநிலத்துக்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.