அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது - 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து விவாதம்

2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2020-09-18 12:19 GMT
சென்னை,

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. தற்போதையை கொரோனா பேரிடர் சூழ்நிலைக்கு மத்தியில், தமிழகத்தில் உள்ள கட்சிகள் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுன் வருகின்றன.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நியமனம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்