மகாளய அமாவாசையில் ராமேசுவரம் அக்னி தீர்த்தம் வெறிச்சோடியது கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவு
கொரோனா பரவலால் மகாளய அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதி வெறிச்சோடியது. கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
ராமேசுவரம்,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்லாமல் இருக்கும் வகையில் பல இடங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது.
அதையும் மீறி நீராட வந்த பக்தர்களை போலீசார் அறிவுரை கூறி கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். சில பக்தர்கள் சங்குமால் மற்றும் ஒலைகுடா பகுதிக்கு சென்று அங்குள்ள கடலில் இறங்கி நீராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அனைவரையும் திருப்பி அனுப்பி வைத்தனர்.
சாமி தரிசனம்
கடலில் நீராட தடை விதிக்கப்பட்ட நிலையிலும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று காலை முதலே பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்றனர்.
கோவிலுக்குள் பக்தர்கள் அனைவரின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கை, கால்களை சுத்தம் செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் வருகை குறைவு
அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்ய விதிக்கப்பட்ட தடையால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மகாளய அமாவாசை அன்று ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது.
இதேபோல கன்னியாகுமரி, திருச்செந்தூர், பவானி கூடுதுறை ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் இல்லை. திருச்சி அம்மா மண்டபத்தில் தடையை மீறி ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.