முதலமைச்சர் பழனிசாமியுடன் நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா சந்திப்பு

நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

Update: 2020-09-17 13:54 GMT
சென்னை,

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த, சிறு விவசாயிகளின் நலனை காக்க, பிரதமர் மோடி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாய குழுக்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு வங்கி மற்றும் தேசிய வங்கிகள் கடன் வழங்க உள்ளன.

அந்த வகையில், தமிழகம் வந்துள்ள நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்