பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-17 10:00 GMT
சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் ரஜினிஜாந்த் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்தக் கடினமான காலங்களில் உங்களுக்குள் உள்ள கடினமான மனிதர் அதிக வலிமையைப் பெற வாழ்த்துகிறேன். பிறந்த நாள் வாழ்த்தக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்