நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-14 15:56 GMT
சென்னை,

திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் அறநிலையத்துறை சார்பாக அமைச்சர் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். அப்போது அயனம்பாக்கத்தில் மினி ஸ்டேடியம், குளம் தூர் வாருவது போன்றவற்றை பொதுமக்கள் மத்தியில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஆவடி தொழில் நகரம் மட்டுமல்லாமல் ஆன்மீக நகரம் கூட. அதேபோல் ஆவடி தொகுதியில் 75 குளங்கள், 15 ஏரிகள் என அதிக நீர்நிலைகளைக் கொண்டது. நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை.

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டையே சூர்யாவும் தெரிவித்துள்ளார், இதில் தவறேதுமில்லை. நீட் விவகாரத்தில் திமுகதான் அரசியலுக்காக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. நீட் தேர்வை கொண்டு வருவதற்கு முதல் விதையை போட்டது திமுக. அடுத்த விதையை போட்டது காங்கிரஸ்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்