குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-12 11:20 GMT
சென்னை, 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தொடரை கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகிறார். 

இதனைத்தொடர்ந்து தன் அனுமதியில்லாமல் குயின் தொடரை தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ கூடாது என்றும், தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்க கோரியும் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான ஜெ. தீபா, உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒளிபரப்புக்கு தடை விதிக்க கோரிய தீபா தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தலைவி திரைப்படத்திற்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை கோரி தீபா தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 28க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்