மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை,
மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இவர்களது குடும்பம் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை(செப்.13) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.