கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-10 14:24 GMT
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ரூ.110 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. கிசான் நிதியுதவி திட்ட முறைகேட்டில் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும். 6 லட்சம் போலி பயனாளிகள் சேருவதற்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்