கொரோனாவுக்கு மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.

Update: 2020-09-09 19:30 GMT
மதுரை, 

மதுரை பசுமலை மூட்டா காலனியை சேர்ந்தவர் சந்தானபாண்டியன்(வயது 56). இவர் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு மூச்சுதிணறல் அதிகமானதை தொடர்ந்து நரிமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சந்தானபாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் சந்தானபாண்டியன் பரிதாபமாக இறந்தார். இறந்த சந்தானபாண்டியனின் மனைவி சாந்தா திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கணேஷ்குமார் என்ற மகன் உள்ளார்.


மேலும் செய்திகள்