வாயில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை - நடந்தே உயிரை மாய்த்து கொண்ட சோகம்; யானைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை
வாயில் காயம்பட்டு உணவருந்த முடியாமல் உயிரிழந்த மக்னா யானைக்கு, அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து பாடல் பாடியும், பூஜை செய்தும் இறுதி மரியாதை செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள மக்களால் புல்டோசர் என அழைக்கப்பட்ட மக்னா யானை வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மக்னா யானை, தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் மாறி மாறி இடம் பெயர்ந்து வந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மக்னா யானைக்கு கேரள வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்ற போது, யானை நாக்கு சேதமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் மக்னா வந்ததை அடுத்து, 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். யானையின் நாக்கு 80 சதவீதம் அறுபட்டு சேதம் அடைந்து இருந்ததால், அந்த யானையால் சாப்பிடவோ, குணப்படுத்தவோ இயலாத நிலை இருந்தது. இதனால் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், வனத்துறையினரால் வைக்கப்பட்ட மருந்து கலந்த உணவை யானை எடுத்துக் கொண்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனைக்கட்டி வழியாக, கேரள வனப்பகுதியான சோலையூர் மரப்பாலம் அருகே நகர முடியாமல் நின்று கொண்டிருந்த அந்த யானை, நேற்று மாலை படுத்துவிட்டது.
இந்நிலையில், இன்று காலையில் மக்னா யானை பரிதாபமாக உயிரிழந்தது. வாயில் காயம்பட்டு உணவருந்த முடியாமல் உயிரிழந்த மக்னா யானைக்கு, அப்பகுதி மக்கள் வாழைப்பழம், தேங்காய், துண்டு, ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வந்து யானைக்கு மாலை அணிவித்து பாடல் பாடியும், பூஜை செய்தும் இறுதி மரியாதை செய்தனர்.
காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் அவற்றை காக்க முன்வர வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.