தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2020-09-09 08:56 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.திருவண்ணாமலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனை, கோவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் ஏரிகள் புனரமைக்கும் பணிகளுக்காக ரூ.260 கோடியில் உத்தேச திட்டம். செய்யாறு ஆற்றின் குறுக்கே புதிதாக அணைக்கட்டு அமைக்கும் திட்டத்துக்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க ரூ.31 கோடியில் விடுதிகள் கட்டப்படுகிறது.

நாட்டிலேயே கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. அதிக பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதிய மருத்துவக் கருவிகள் இருப்பில் உள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகள்