பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பற்ற ஆபத்தான ஆட்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பற்ற ஆபத்தான ஆட்சியை அ.தி.மு.க. நடத்துகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொது அமைதியைக் காப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் தமிழகம் திறம்படச் செயல்பட்டுள்ளது என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை, பச்சைப் பொய் என தற்போது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை நிரூபித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர், சிறப்பு சட்டங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையே 4.20 லட்சம், 4.99 லட்சம் என்று உயர்ந்து விட்டன. குற்றச்செயல்களும் 18.61 சதவீதம் அதிகரித்து விட்டன.
கொலைக்குற்றங்களில் சென்னையில் 11.69 சதவீதமும், கோவையில் 47.62 சதவீதமாகவும் அதிகரித்து; மாநகரம் இரண்டிலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஆபத்தான சூழலை அ.தி.மு.க. ஆட்சி உருவாக்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கோவையில் 40.79 சதவீதமாகவும், சென்னையில் 18.54 சதவீதமாகவும் அதிகரித்து; பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநகரங்களாகச் சென்னையையும், கோயம்புத்தூரையும் மாற்றிக் காட்டியதுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனை.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாமல், அ.தி.மு.க. ஆட்சி தடுமாறுகிறது என்பதைப் பகிரங்கப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 17.74 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 211.24 சதவீதம் அதிகரித்துள்ளது என்றால்; பெண்களும், குழந்தைகளும் அ.தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் பாதுகாப்பின்றி ஆபத்தின் வளையத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது புலனாகியுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மூத்த குடிமக்களுக்கு எதிரான வன்முறையில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது மாநிலமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கு காரணமாகி மிகச்சிறந்த தமிழக காவல்துறையை தங்களுடைய ஆதாயத்திற்காக அரசியல் மயமாக்கி அதை, சொன்னபடி ஆடும் கைப்பாவையாக மாற்றி, இன்றைக்கு மக்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பற்ற ஆபத்தான ஆட்சியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மாநிலத்தின் பொருளாதார தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி; அமைதிக்கும், மக்களின் பாதுகாப்பிற்குமே மிகப்பெரிய சாபக்கேடு மட்டுமல்ல; தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்யத்திற்கு மாநில அளவிலான பெர்மிட் வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி என்று, ஆதாரங்களின் அடிப்படையில், பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.