மாற்றுத்திறன் கொண்ட உறவினரை கவனித்து வரும் அரசு ஊழியருக்கு வழக்கமான பணியிட மாற்றத்தில் இருந்து விலக்கு - தமிழக அரசு உத்தரவு
மாற்றுத்திறன் கொண்ட உறவினரை கவனித்து வரும் அரசு ஊழியருக்கு வழக்கமான பணியிட மாற்றத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.சுவர்னா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஏ, பி மற்றும் சி பிரிவில் உள்ள அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கான கொள்கையை தமிழக அரசு ஏற்கனவே வகுத்துள்ளது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் ஒருவருக்கு பொதுவாக இடமாற்றம் அளிக்கப்படுகிறது.
ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கும் பட்சத்தில், 3 ஆண்டு முடிவதற்குள் தனது இடமாற்றம் தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கலாம். இதுபோன்ற காரணங்களுக்காக 5 ஆண்டுகள் வரை அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட மாட்டார்.
இந்த நிலையில் 2018-ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. அதில், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை கொண்ட மகள், மகன், பெற்றோர், வாழ்க்கைத்துணை, சகோதரர், சகோதரி (இதில் எவராவது ஒருவர்) அரசு ஊழியரை சார்ந்திருக்கும் பட்சத்தில், அவர்களை கவனித்து வரும் அந்த அரசு ஊழியரை, நிர்வாக வசதிக்காக வழக்கமான இடமாற்றம் அல்லது சுழற்சி இடமாற்றம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து மே 31-ந் தேதிக்குள் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. மேற்கூறப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட உறவினரை கவனித்து வரும் அரசு ஊழியருக்கு இதுபோன்ற இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிடுகிறது.
மேற்கூறப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட உறவினர்களை கவனிப்பவராக அந்த அரசு ஊழியர் இருக்க வேண்டும். அவர் கவனித்து வரும் அந்த உறவினர், 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் 2 (ஆர்) பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறைபாடுகளை கொண்டவராக அளிக்கப்பட்ட சான்றிதழை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.