கொரோனா இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இன்னும் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூரில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"மத்திய அரசின் ஐசிஎம்ஆர் இன்னும் கொரோனா தொற்றை தமிழகத்தில் சமூகப் பரவலாக அறிவிக்கவில்லை. அதனால் கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை.
தளர்வுகள் அதிகம் அளிக்கப்பட்டாலும், பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியைத் தொடர வேண்டும். அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை அனைத்து மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட உள்ளது” என்றார்.