செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்.19 வரை அவகாசம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் 19ஆம் தேதி வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா பீதியில் இன்னும் பள்ளி கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் திறக்க வாய்ப்பு இருப்பதால் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் வசூலித்து வருகிறது.
அதன் படி செப்.5 ஆம் தேதிக்குள் செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதுமட்டுமில்லாமல், கட்டணத்தை செலுத்த தவறினால் மாணவர்கள் வகுப்புகளில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் மாணவர்கள் பட்டியலில் இருந்து அவர்கள் பெயர் நீக்கப்படும் என்றும் அறிவித்தது.
இதனை எதிர்த்து மாணவர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த மனுவில், கொரோனா ஊரடங்கால் பலர் தவித்து வரும் நிலையில் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதாகவும் 40% மட்டுமே கல்விக் கட்டணமாக இருப்பதாகவும் பயன்படுத்தாதவற்றுக்கு கட்டணம் செலுத்த சொல்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், மாணவர்கள் பெயர் நீக்கப்படும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் செமெஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்த வரும் 19 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.