தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு உறுதியான மாவட்டங்கள் பின்வருமாறு:-
* மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 14,570 ஆக அதிகரித்துள்ளது. 813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,089 ஆக உயர்ந்துள்ளது. 1,236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தேனி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,980 ஆக உயர்ந்துள்ளது. 1,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* புதுக்கோட்டையில் மேலும் 105 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,455 ஆக உயர்ந்துள்ளது.
* வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,579 ஆக உயர்ந்துள்ளது.