சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமனம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமனம் செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2020-07-25 20:32 GMT
சென்னை,

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வந்த ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்றால் அண்மையில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. மறைவு எய்திய காரணத்தால், மாவட்ட கட்சி பணிகள் செவ்வனே நடைபெற நே.சிற்றரசு சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பின் பிறநிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதே போன்று, தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த நே.சிற்றரசு அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக ராஜா அன்பழகன்(மறைந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வின் மகன்) மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக தலைமை கழக ஒப்புதலோடு முதல் நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்