சென்னை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை
சென்னை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.92 லட்சமாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.92 லட்சமாக உள்ளது.
தலைநகர் சென்னையை உலுக்கிய கொரோனா, தற்போது பிற மாவட்டங்களில் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. வட மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மிக மிக அதிகமாக உள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகமெடுத்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகமெடுத்துள்ளது.
இந்த சூழலில், சென்னை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஈடுபட்டுள்ளனர்.