சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்
‘சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது’, என்றும் ‘முன்பு இருந்த பயம் இப்போது இல்லை’ என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் கண்டறியும் முகாமை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதையொட்டி மாநகராட்சி மூலமும், தமிழக அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட முக்கியக் காரணமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில் வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்.
சென்னையை பொருத்தவரை கொரோனா பாதுகாப்புதடுப்பு நடவடிக்கைகளில் முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவிலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு ஜீரோ என்ற நிலை ஏற்படும். சென்னை என்றாலே முன்பு பயம் ஏற்பட்டது. இப்போது சென்னையில் கொரோனா பாதிப்பு வேக வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. தற்போதைய சூழலில் இது மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.
சென்னையிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடம் பெற்ற ராயபுரம் மண்டலத்தில் முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவிலேயே ராயபுரம் மண்டலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்ற நிலை உருவாகும்.
சென்னையில் மட்டுமே தினந்தோறும் 500 என்ற எண்ணிக்கையில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. முதல்-அமைச்சர் அறிவுரையின் பேரில் சிறப்பான களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து எடுத்துச் சொல்லச் சொல்ல மக்களும் தற்போது நோயின் தீவிரத்தையும், சூழ்நிலையின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து உள்ளார்கள். விரைவிலேயே ஒரு நல்ல மாற்றத்தை நாம் காண்பது நிச்சயம்.
கொரோனா மரணங்களை அரசு மறைக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அது தவறு. ஒருவர் இறந்தால் கூட அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று சோதனை செய்யப்படுகிறது. அந்த ரிப்போர்ட் வருவதற்கு தாமதம் ஏற்பட்டு இருக்கலாமே தவிர, கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு நிச்சயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.