கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியவர் திருத்தணிகாசலத்துக்கு மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
திருத்தணிகாசலம் மீதான 2 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை,
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த திருத்தணிகாசலம் (வயது 49) என்பவர், தன்னை சித்த மருத்துவர் எனக்கூறி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பொய்யான தகவலை பரப்பியதாக இந்திய ஓமியோபதி மற்றும் மருத்துவத்துறை இயக்குனர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே திருத்தணிகாசலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் குறைபாட்டுக்கு நீண்ட நாட்களாக மருந்து கொடுத்து பணம் பறித்ததாகவும், வெண்புள்ளிகள் குறைபாட்டுக்கு அவர் அளித்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் அளிக்கப்பட்ட புகார்கள் மீது தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்த போலீசார், இந்த வழக்குகளிலும் அவரை கைது செய்தனர்.
இந்திய ஓமியோபதி இயக்குனர் அளித்த புகாரில் பதிவு செய்த வழக்கில் திருத்தணிகாசலத்துக்கு எழும்பூர் கோர்ட்டு ஏற்கனவே ஜாமீன் வழங்கியது. மற்ற 2 வழக்குகளிலும் ஜாமீன் கோரி அவர் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், திருத்தணிகாசலம் மீதான 2 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். திருத்தணிகாசலம் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் மீதான வழக்குகளில் ஜாமீன் பெற்ற போதிலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.