தேனி மாவட்டத்தில் பயிற்சி மருத்துவர் உள்பட 132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் பயிற்சி மருத்துவர் உள்பட 132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-21 07:36 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  

இந்நிலையில் இன்று தேனி மாவட்டத்தில் பயிற்சி மருத்துவர் உள்பட 132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,859 ஆக உயர்ந்து உள்ளது. 

நேற்று ஒரே நாளில்  கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,289 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 1,516 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேனி மாவட்ட மக்கள் சமூக இடைவேளி மற்றும் முககவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.

மேலும் செய்திகள்