புதுச்சேரியில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Update: 2020-07-20 06:24 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,092 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது 

மேலும் செய்திகள்