கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம் சலுகை அளிக்கின்றன தமிழகத்தில் மின் கட்டண சலுகை கொடுக்க முடியாதது ஏன்? அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி
கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின் கட்டண சலுகை கொடுக்கும்போது, தமிழகத்தில் மட்டும் முடியாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மின் கட்டணம் வசூல் தொடர்பாக காணொலிக்காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
ஒருபக்கம் கொரோனா வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம் மக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாட்டி வதைக்கிறார். கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது.
மின்கட்டணம் செலுத்துவதற்கு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30-ந் தேதி வரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். அரசு நிகழ்காலத்தில் செயல்பட வேண்டும். அரசின் அலட்சியப் போக்கால் இன்று பிற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். அதுமட்டுமின்றி, ஊரடங்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும்தான் போடப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைவரும்தான் வாழ்வியல் இழந்து தவித்து வருகின்றனர். ஜூலை 30-ந் தேதிக்கு மேல் மக்களிடம் பணப்புழக்கம் வந்துவிடுமா?.
மின் கட்டண கணக்கீடு எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள். எவ்வளவு அநியாயமாக கட்டணங்கள் உயர்ந்து இருக்கிறது பார்த்தீர்களா?. ஏன் இவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று கேட்டால், அரசாங்கம் என்ன சொல்கிறது தெரியுமா?. “நீங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கிறீர்கள். அதனால் மின்சாரம் அதிகமாக செலவு ஆகி இருக்கும்” என்று சொல்கிறார்கள். வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகின்ற அபராதத் தொகையாக இது?, இல்லையென்றால், தண்டனையா?, வீட்டில் இருந்தது தவறா?.
மின் பயன்பாடு என்பது பயன்படுத்துவதைப் பொறுத்து கூடும் குறையும். இது மக்களுக்கும் தெரியும். ஆனால், இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் வந்திருக்கின்ற கட்டணம் அநியாயத்திற்கு அதிகமாக இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். இதுதான் பெரும்பாலான குடும்பங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. “தவறான அடிப்படையில் மின்சார கணக்கீடு எடுத்திருக்கிறார்கள்” என்று மக்கள் சொல்கிறார்கள்.
மின்சாரம் என்பது மக்களது மிக மிக அவசியத்தேவை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தான் மின்சார வாரியமே இயங்குகிறது. நுகர்வோருக்கு நியாயமான மின்கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம் என்று மின்சாரச் சட்டத்திலேயே இருக்கிறது. இப்போது அரசாங்கம் விதித்த கட்டணம் நியாயமான கட்டணம் அல்ல; அநியாயமான கட்டணம்.
கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின் கட்டணச் சலுகை கொடுத்து இருக்கிறார்கள். இந்த மாநில அரசுகளால் முடிகிறது; தமிழக அரசால் ஏன் முடியவில்லை?. மக்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் குரலைக் கோட்டைக்குச் சொல்வதற்காகத்தான் வரும் 21-ந்தேதி (நாளை) கருப்புக்கொடி தாங்கி கண்டன முழக்கத்தை எழுப்பப் போகிறோம்.
நான்கைந்து பேர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி முககவசங்களுடன் முழக்கங் களை எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.