ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. காந்திக்கு கொரோனா தொற்று உறுதி
ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை,
தமிழகத்தில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுப்பணிகளில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன் மற்றும் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே கொரோனா மீதான பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.