கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது - திமுக தலைவர் ஸ்டாலின்
கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
கோவையில் நேற்று அடுத்தடுத்து 3 கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை என்.எச்.சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில் முன்பு டயரை கொளுத்திய மர்ம நபர்கள், அங்கிருந்த சூலத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கோவையில் பாஜக மற்றும் இந்து முன்னனி அமைப்பினர் கோவிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
— M.K.Stalin (@mkstalin) July 19, 2020
பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை @CMOTamilNadu உறுதி செய்ய வேண்டும்.