கொரோனா பாதிப்பு: சென்னையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்தது

சென்னையில் ஒட்டுமொத்தமாக 15 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2020-07-17 06:56 GMT
சென்னை

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 82 ஆயிரம் பேரில் இதுவரை 65 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது சென்னையில் ஒட்டுமொத்தமாக 15 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இன்று 82,128-ஆக அதிகரித்துள்ளது. இத்தொற்று காரணமாக 1,341 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.சென்னையில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகபட்சமாக ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டது. இதன் தொடா்ச்சியாக பிற மண்டலங்களுக்கும் தொற்று பரவல் அதிகமாகியது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த 20 நாள்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தை எட்டியது.

வியாழக்கிழமை 1,157 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,128-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 65,748 போ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 15,038 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். 

கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,341-ஆக அதிகரித்துள்ளது.மண்டலம் வாரியாக சிகிச்சை பெற்று வருவோர்  விவரம் வருமாறு:-

திருவொற்றியூா் 616
மணலி 209
மாதவரம் 419
தண்டையார்பேட்டை 848
ராயபுரம் 1,141
திருவிக நகா் 1,039
அம்பத்தூா் 927
அண்ணா நகா் 1,553
தேனாம்பேட்டை 1,432
கோடம்பாக்கம் 2,077
வளசரவாக்கம் 744
ஆலந்தூா் 476
அடையாறு 1,017
பெருங்குடி 331
சோழிங்கநல்லூா் 377 

மேலும் செய்திகள்