தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-16 14:51 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. ஏற்கனவே  மகன், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கிரீன்வேஸ் இல்லத்தில் அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சர்கள், கேபி அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பித்தக்கது. அமைச்சர் கேபி அன்பழகன் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டார்.

மேலும் செய்திகள்