மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 16-ந்தேதி (இன்று) காலை 10 மணிக்கு காணொலிக்காட்சி மூலமாக நடைபெறும். இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.
மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனான கூட்டத்தில் மின்சார கட்டண உயர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.