விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,500-ஐ கடந்தது

விருதுநகர் மாவட்டத்தில் 204 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-07-15 09:54 GMT
விருதுநகர்,

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து சமீப நாட்களாக மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது.  இதனால் நேற்று நள்ளிரவு 12 மணி வரை மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது.

இந்த நிலையில், மதுரையை அடுத்த விருதுநகர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிரித்து வருகிறது.  கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.  கடந்த 14ந்தேதி, 191 பேருக்கு பாதிப்பு உறுதியானது.  அவர்களில் 10 கர்ப்பிணிகளும் அடங்குவார்கள்.  இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 351 ஆக உயர்ந்திருந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  ஒருவர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் புதிதாக 204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், விருதுநகர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,696 ஆக உயர்வடைந்துள்ளது.  19 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சிவகாசியில் மட்டும் 77 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  இதுவரை 983 பேர் குணமடைந்துள்ளனர். 1,694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்