சென்னை போலீசில் புதிய பாதிப்பு: உதவி கமிஷனர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை போலீசில் புதிய பாதிப்பாக உதவி கமிஷனர் உள்பட 8 பேரை கொரோனா தாக்கியது . மேலும் 32 போலீசார் நலம் அடைந்தனர்.
சென்னை,
சென்னை போலீசில் நேற்றுமுன்தினம் வரை 1,445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று உதவி கமிஷனர் உள்பட 11 போலீசாரை கொரோனா தாக்கியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு 1,453 ஆக உயர்ந்தது.
கொரோனா பிடியில் ஒரு புறம் சிக்கினாலும், சிகிச்சை பலனளித்து குணம் அடைந்து பணிக்கு உடனடியாக போலீசார் திரும்பி வருகிறார்கள். அதன்படி நேற்று 32 போலீசார் குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரையில் 885 போலீசார் குணம் அடைந்து உள்ளனர்.