தளர்வில்லா ஊரடங்கிலும் மீன் வாங்க திரண்ட அசைவ பிரியர்கள்

தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தளர்வில்லா ஊரடங்கு கடைபிடிக்கும் நிலையில் ராணிப்பேட்டையில் அசைவ பிரியர்கள் மீன் வாங்க திரண்டனர்.

Update: 2020-07-12 06:00 GMT
ராணிப்பேட்டை,

தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தளர்வில்லா ஊரடங்கு கடைபிடிக்கும் நிலையில், ராணிப்பேட்டையில் அசைவ பிரியர்கள் மீன் வாங்க கூட்டமாக திரண்டனர். ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி கிராமத்தில் சாலையோரத்தில் விற்பனை செய்த மீனை, முகக்கவசம் அணியாமல், சமூக விலகலின்றி வாங்கிச் சென்ற அவர்களால், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்று கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது.

நேற்று சென்னை காசிமேடு பகுதியில் சாலையில் விற்க்கப்பட்ட மீன்கடைகள், திருவொற்றியூரில் உள்ள காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் உள்பட பெரும்பாலான காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்