வீடுகளுக்கு மின்சார கட்டணம் பல மடங்கு உயர்வு: அரசு பரிசீலிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஊரடங்கு காலத்தில் மின்சாரம் கணக்கீடாத நிலையில் வீடுகளுக்கு மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை,
ஊரடங்கு காலத்தில் மின்சாரம் கணக்கீடாத நிலையில் வீடுகளுக்கு மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். பூட்டிய வீடுகளுக்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அரசு முறையாக பரிசீலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கை பிறப்பித்து உள்ளது.குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி தொடங்கிய ஊரடங்கு நூறு நாளையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இதனால் ஏராளமான பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். மளிகை, காய்கறி, ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்களும் முடங்கி போய் உள்ளன.
இது ஒருபுறம் இருக்க, தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 50 சதவீதத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்து தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பள்ளி, கல்லூரிகளும் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் மாணவர்களும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பெரும்பாலான நேரம் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் பொழுதை கழித்து வருவதை காண முடிகிறது.
குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் இருப்பதால் மின்விசிறி எப்போது பார்த்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு சில வீடுகளில் கம்ப்யூட்டர் இருப்பதால் இணையதளம் பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் அனைவரின் வீடுகளிலும் மின்சாரம் தேவை அதிகரித்து வருவதால் மின் கட்டணமும் அதிகரித்து உள்ளது.
பொதுவாக 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு உதாரணத்திற்கு குறைந்தபட்ச மின் கட்டணம் ரூ.165 செலுத்தியவர்களுக்கு ரூ.1,100-ம், ரூ.630 செலுத்தியவர்களுக்கு தற்போது ரூ.3 ஆயிரத்துக்கும் மேல் செலுத்த வேண்டி உள்ளது. டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மின்சார கணக்கீடே எடுக்காத நிலையில் தற்போது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
பல மடங்கு உயர்ந்த தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதத்தில் இருந்து மூடியிருக்கும் விடுகளுக்கும் பல மடங்கு மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வருகிற 15-ந்தேதி வரை மின்சார கட்டணம் செலுத்த காலஅவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.
வேலையிழப்பு, வீட்டு வாடகை கட்ட முடியாமல் தவிப்பு, பொருளாதாரம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் சென்னையை காலி செய்து கொண்டு சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டு செல்கின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மின்சார கட்டணம் பல மடங்கு கட்ட வேண்டியுள்ளதால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசும், வாரியமும் முறையாக பரிசீலனை செய்து உரிய கட்டணத்தை அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.