நாளை முழு ஊரடங்கு: பெட்ரோல் பங்குகள் இயங்காது - பெட்ரோலிய வணிகர் சங்கம்

நாளை முழு ஊரடங்கு காரணமாக, பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-04 10:20 GMT
சென்னை, 

ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த வித தளர்வும் இல்லாமல் தமிழகம்  முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நாளை முழு ஊரடங்கு காரணமாக, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார். 

மேலும் ஆம்புலன்ஸ், பால் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை வாகன தேவைகளுக்காக மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும், திங்கள் கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

மேலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் பங்குகள் இயங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்