தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அங்கீகாரம் செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிப்பு
தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அங்கீகாரம் மேலும் 3 மாதங்களுக்கு செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லும் படியாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு மாநிலம் தழுவிய ஊரடங்கினை அறிவித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் எடுத்து வருகிறது. அந்த வகையில் முதல்-அமைச்சர் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி பிறப்பித்த ஆணைக்கிணங்க, சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் உத்தரவுபடி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981-ன் படி கடந்த மார்ச் 31-ந்தேதி வரை செல்லத்தக்கபடி வழங்கப்பட்ட இசைவாணைகள் மற்றும் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் கடந்த மார்ச் 31-ந்தேதி வரை செல்லத்தக்கபடி வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் ஆகியவற்றை மேலும் மூன்று மாதங் கள் அதாவது வருகிற 30-ந்தேதி வரை செல்லத்தக்கபடி, நீட்டிப்பு செய்து வழங்கியது.
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படும் நிலையில் உள்ளது. எனினும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங் கள் பயனடையும் வகையில் வருகிற 30-ந்தேதி வரை செல்லத்தக்கபடி ஏற்கெனவே நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இதனை தற்போது, முதல்- அமைச்சரின் ஆணைக்கிணங்க மேலும் மூன்று மாத காலங்கள் அதாவது வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லத்தக்கபடி நீட்டித்து வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.