என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்து: உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-01 13:56 GMT
சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் என்.எல்.சியில், பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் 7 பேரின் குடும்பத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிப்பதாவது:-

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.
விபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்