தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 94 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 25ம் தேதி முதல் 3,509, 3,645, 3,713, 3940, 3949, 3,943 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,201ல் இருந்து 1,264 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றில் இருந்து இன்று 2,852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 7வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கு கூடுதலாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.