சென்னையில் இருந்து மதுரை தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமான சேவைகள் ரத்து

சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடிட், திருச்சி செல்லும் விமானங்கள் நாளை முதல் ரத்து செய்யப்படுகின்றன.

Update: 2020-06-22 18:11 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவல் மதுரையில் வேகமெடுத்துள்ளது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுரையில் நாளை (23 ஆம் தேதி) நள்ளிரவு முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.  ஜூன் 30 ஆம் தேதி வரை இந்த முழு முடக்கம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மதுரை மாநகராட்சி, பரவை பஞ்சாயத்து, மதுரை கிழக்கு , மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் முழு முடக்கம்  அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 4 விமானங்களின் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்