கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம்

கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-06-18 09:02 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கும் நிலையில் தமிழக அரசு பல்வேறு பாதிகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ். மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.
 
தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். கடந்த சில நாட்களுக்கு முன், வணிக வரித்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது அவரை கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமினம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்