தமிழகத்தில் அடுத்த 48 மணிக்கு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 48 மணிக்கு நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் லேசான மழையும் பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் அளவாகவும் இருக்கும்.
அடுத்த 4 நாட்களுக்கு காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.