உயிர்களின் மதிப்பறிந்தவர்கள் போரை விரும்ப மாட்டார்கள் - கமல்ஹாசன் டுவீட்

உயிர்களின் மதிப்பறிந்தவர்கள் போரை விரும்ப மாட்டார்கள் என்றும் அமைதி வழியில் தீர்வு காண்போம் என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்ட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2020-06-16 15:20 GMT
சென்னை,

இந்திய சீன எல்லையில் இரு நாட்டுப் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் தமிழக வீரர் உள்பட் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உயிரிழந்த பழனியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனியின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். பழனியின் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் உயிர்களின் மதிப்பறிந்தவர்கள் போரை விரும்ப மாட்டார்கள் என்றும் அமைதி வழியில் தீர்வு காண்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்