ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி-மகளுக்கு கொரோனா பாதிப்பு

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியின் மனைவி-மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

Update: 2020-06-16 07:33 GMT
சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி (வயது 61) கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது எம்.எல்.ஏ பழனி மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.வின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

மேலும் செய்திகள்