கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் சேவை பெற தொலைபேசி எண்கள் அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் சேவை பெற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-09 11:24 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் மொத்தம் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்,சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆம்புலன்ஸ் வசதிக்கு பிரத்யேக எண் வெளியிடப்பட்டுள்ளது. 044 - 40067108 என்ற எண்ணை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டுவரும் நிலையில் கூடுதல் அழைப்புகளை கையாள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்