அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை கண்டித்து போராட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை கண்டித்து கோவையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-08 05:57 GMT
சென்னை

தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை கண்டித்து கோவையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஊழலை எதிர்த்து போராடும் திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், இதனை கண்டித்து கோவையில் போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்