இந்தியா, உலகளாவிய உற்பத்தி நாடாக மாற்றம் பெறும் -வெங்கையா நாயுடு நம்பிக்கை
சுயசார்பு இந்தியா, உள்நாட்டு உற்பத்தியில் இருந்து உலகளாவிய உற்பத்தி நாடாக மாற்றம் பெறும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனாவில் இருந்து உயிர்களை காப்பாற்றுவதோடு பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கையையும் சமநிலைப்படுத்துவது கடினமான பணியாகும். இந்த சவால், ஒற்றுமைக்கான ஊக்கத்தை உருவாக்கி உள்ளது.
4 கட்ட ஊரடங்கை தாண்டும் நிலையில், மூடப்பட்ட பொருளாதார கதவுகளை மட்டுமல்லாமல், புதிய வாய்ப்புகளுக்கான ஜன்னல், கதவுகளையும் திறக்க இந்தியா விரும்புகிறது. உள்நாட்டு சம வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நாடு நோக்கிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தியை சுயசார்பு திட்டம் அளிக்கும். தொழில்முனைவோர் வளர்ச்சியின் ஏவுதளமாக இது இருக்கும். இதில், மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி ஊரகப் பகுதிகளில் பண்ணை மற்றும் பண்ணையில்லாத பிரிவுகளில் நீண்டகால வளர்ச்சியை ஏற்படுத்தும்.
தற்போதைய சவாலை வாய்ப்பாக மாற்ற இது உதவுகிறது. பேச்சில் உள்ளவற்றை செயல்பாட்டில் கொண்டு வரும்போதுதான் நமது நாட்டின் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கொரோனா நமக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. நோய் பரவலை தடுக்க நாம் தனிமைப்பட வேண்டி உள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகளில் தொழில் தொடர்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, இதில் இருந்து எப்படி மீள்வது என்பதை மறுபடியும் சிந்திக்கச் செய்திருக்கிறது.
கொரோனாவின் மிகப் பெரிய அச்சுறுத்தலும், நமது நாட்டின் மக்கள் தொகையும், மிகமுக்கிய தேவைகளான முககவசம், வெண்டிலேட்டர், பி.பி.இ. உபகரணங்கள் ஆகியவை ஒன்றாக முன்வந்து நின்றன. கொரோனாவை எதிர்கொள்ள இந்த அவசரகால நிலை நம்மை, அவற்றின் உற்பத்திக்கு தள்ளிவிட்டது.
அதே நேரத்தில் இந்தியாவின் தயாரிப்பான ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ போன்ற மருந்துகள், வெளிநாடுகளுக்கு அதிகம் தேவைப்பட்டன. இதை மகிழ்ச்சியுடன் பல நாடுகளுக்கு இந்தியா வழங்கியது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தக தொடர்புகளை இந்த அவசர நிலை சீர்குலைத்துவிட்டது. இந்த நிலையில்தான் சுயசார்பு நிலைக்கு மக்களை பிரதமர் நரேந்திர மோடி அழைத்தார். அது, பாதுகாப்பாக இருப்பதற்கோ அல்லது தனிமைப்பட்டு இருப்பதற்கோ விடுக்கப்பட்ட அழைப்பு அல்ல. மேம்பாட்டுக்கான நடைமுறை உபாயங்களை கடைபிடித்து, அதன் மூலம் நம் தேசத்தின் உள்ளார்ந்த பலத்தை அறிந்து, அதை உபயோகப்படுத்துவதற்கான அழைப்பு அதுவாகும்.
இது கொள்கைக்கான சீர்திருத்தங்களைத் தூண்டுவதாக உள்ளது. மேலும், பொருளாதார பாதையை மீட்டெடுப்பதற்கான உத்வேகத்தை அளிக்கக்கூடியதாகவும் உள்ளது. பிரதமர் உரையாற்றும்போது, “உலக தொழில் விவகாரங்களில் உள்ள கடின போட்டிகளுக்கு தயார்ப் படுத்தி கொள்வதற்கு சுயசார்பு உதவுகிறது“ என்று குறிப்பிட்டார்.
இந்த அழைப்பு, நமது இயற்கை, மனிதவளம், தொழில்நுட்பங்களை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா? என்ற எண்ணத்தை பிரதிபலிக்கச் செய்யும் நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது. நம்மிடம் மறைந்திருக்கும் பயன்படாத சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அந்த அழைப்பு எதிர்பார்க்கிறது.
நம்மிடம் இருக்கும் வளம், தொழில்நுட்பத்துடன் நமது சொந்த தேவைகளை எதிர்கொள்ளும் திறமையை அந்த அழைப்பு சுட்டிக்காட்டுகிறது.
புதிய இந்தியாவை வடிவமைக்கும் வலுவான இழைகளை நாம் இணைத்தாக வேண்டும். அதாவது, இந்தியாவின் உள்நாட்டு தேவைகளை சந்திக்கும் சரக்கு மற்றும் சேவைகளை அளிப்பது மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான ‘பிராண்ட்‘களை நாம் உருவாக்க வேண்டும்.
வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் நம்மிடம் உண்டு. பல்வேறு பிரிவுகளில் உலக அளவில் சிறந்த பொருட்களை உருவாக்கியுள்ள முன்னோடிகள் நம்மிடம் உண்டு. உள்ளூர் தயாரிப்புகளை மதிக்கும் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டால் சந்தை விரிவாகும். தயாரிப்பு விஸ்தாரமாகி உலக அளவில் செல்லும் தரத்தைப் பெறும். உள்ளூர் உற்பத்திக்கான குரல்தான் சுயசார்பு இந்தியாவுக்கான படிக்கல்லாக உள்ளது.
உள்நாட்டு உற்பத்தியில் இருந்து சுயசார்பு இந்தியா, உலகளாவிய உற்பத்தி நாடாக மாற்றம் பெறும் என்ற கனவை நனவாக்க நம்மால் முடியும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.