தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து, கூடுதல் தளர்வுகள்- ஒளிரும் தமிழ்நாடு மாநாட்டில் முதல்வர் உரை

தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து, கூடுதல் தளர்வுகள் என ஒளிரும் தமிழ்நாடு மாநாட்டில் முதல்வர் உரையாற்றினார்.

Update: 2020-06-06 06:34 GMT
சென்னை

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக "ஒளிரும் மாநாடு" நடத்தப்படுகிறது. மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

மாநாட்டில் முதல்-அமைச்சர் பேசியதாவது:-

கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது, இயல்பு நிலையை நோக்கி தமிழகம் முன்னேறுகிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து, கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும்.தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

மேலும் செய்திகள்