தமிழகத்தில் மேலும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனாவால் தொடர்ந்து பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்களை
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் ஒரே நாலில் 861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 15,762 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 12 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 1,405 பேர், பிறமாநிலம், நாடுகளில் இருந்து வந்த 33 பேர் என 1,438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 18,693லிருந்து 19,809 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.