முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான் ஐகோர்ட்டு கருத்து
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும், மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, அவரது கணவர் முருகன். இவர்கள் இருவரும், இலங்கையில் உள்ள முருகனின் தாயார், லண்டனில் உள்ள சகோதரி ஆகியோரிடம் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நளினியின் தாயார் பத்மா தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, வெளிநாட்டவருடன் பேச சிறை கைதிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் இந்த விவகாரத்தில், ‘மனிதாபிமானத்துடன் தமிழக அரசு செயல்பட வேண்டும்’ என்று ஏற்கனவே கருத்து கூறியிருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘கொரோனா வைரஸ் தொற்று சிறையில் உள்ள கைதிகளுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக அவர்களை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரம், உறவினர்களுடன் செல்போன் மூலம் வீடியோ காலில் பேச அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
வீடியோ காலில் கைதிகள் பேசும் வசதிகளை செய்து கொடுக்க ரூ.1 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கைதி 10 நிமிடம் உறவினர்களுடன் பேசலாம். மாதத்துக்கு 3 முறை மட்டுமே பேச அனுமதி வழங்கப்படும். சிறை விதிகளின்படி இந்தியாவுக்குள் உள்ள உறவினர்களுடன் மட்டுமே இவ்வாறு பேச அனுமதிக்க முடியும். வெளிநாட்டவர்களுடன் பேச அனுமதி வழங்க சிறை விதிகளில் இடமில்லை‘ என்று வாதிட்டார்.
மேலும், ‘முருகனுக்கும், நளினிக்கும் இப்போது அனுமதி வழங்கினால், பிற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தமிழக சிறைகளில் உள்ளனர். அவர்களும் இதை உரிமையாக கோருவார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கும்பட்சத்தில், அவர்களுடைய தாய் மொழியில் பேசினால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை புரிந்துக் கொள்ள முடியாது. இது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறி விடும். அதுவும் மத்திய வெளிவிவகாரத்துறை ஒப்புதல் இல்லாமல், இதுபோல வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி வழங்க முடியாது. இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அனைத்து மாநில அரசுகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளனர். எனவே மனுதாரர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி நிவாரணம் பெறலாம்‘ என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்வதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் அவகாசம் கேட்டார்.
இவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை இன்று (வெள்ளிக் கிழமை) மீண்டும் விசாரிப்பதாக கூறினர். மேலும், ‘தன்னுடைய தந்தையின் மரணம் தொடர்பாக வெளிநாட்டில் வாழும் தன் தாயுடன் முருகன் தொலைபேசி மூலமாக பேசுவதால் என்ன பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட போகிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்‘ என்றும் கருத்து தெரிவித்தனர்.