சளி, இருமல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும் - விஜயபாஸ்கர் பேட்டி

சளி, இருமல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-01 08:50 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.  அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என சுட்டி காட்டியுள்ளது.

இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது. சளி, இருமல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால், தொற்று அதிகரிக்கிறது.

தளர்வுகள் அதிகரிக்கும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்