மாநிலங்களின் வரி பங்கை உயர்த்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மாநிலங்களின் வரி பங்கை உயர்த்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15-வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, மாநிலங்களின் தற்போதைய வரி பங்கான 41 சதவீதத்தில் இருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.